'பூலோக சொர்க்கம்' என்று அழைக்கப்படும் காஷ்மீர், இந்தியாவின் வட எல்லையாக உள்ளது.காஷ்மீரின் பெரும் பகுதியைப் பாகிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்டது மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தானுக்கா.. அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா.. இன்றும் அணையாமல் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இந்தச் சிக்கலுக்கான துவக்கம் எங்கே ஆரம்பிக்கிறது? காஷ்மீரின் தோற்றம், அதன் வரலாறு இவற்றைத் தெளிவாக விளக்கும் வகையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
அக்பர், அசோகர் போன்ற பேரரசர்களும், சிறு சிறு மொகலாயர்கள், குஷானர்கள் முதலானோரும் ஆண்ட காஷ்மீர் ஆங்கிலேயர் வசம் சென்றது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது, பாகிஸ்தான் காஷ்மீரின் சில பகுதிகளைக் கைப்பற்றியது, இணைப்பு ஒப்பந்தம் உருவானது, காஷ்மீர் மக்களின் உரிமைக்காகப் போராடிய ஷேக் அப்துல்லா, சட்டப்பிரிவு 370 முதலானவை குறித்து விரிவாக இந் நூலில் பேசப்பட்டுள்ளது.