திராவிட இனம் சார்ந்த மூத்த தமிழ் மக்களின் வரலாற்றைப் போற்ற, பொருளாதார மேம்பாட்டிற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, காலத்தால் அழிக்கமுடியாத இந்த அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய, மனிதருள் வைரமான இந்தப் பாட்டுடைத் தலைவரின் வரலாற்று நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, விளக்குவதற்கு நான் கலைஞர் பரணி என்று தலைப்பிட்டுள்ளேன். தாழிசைப் பாடல்களாக எழுத முயற்சிக்காமல், பழமையில் புதுமையாக மரபு சார்ந்த10 தலைப்புகளில், 100 எண்சீர் விருத்தங்களை அமைத்திருக்கிறேன்.