கலைஞர் கருணாநிதி அவர்ளைப் பாடுபொருளாகக் கொண்டமைந்த கவிதைத் தொகுப்பு நூல். புதுக்கவிதைகளின் தேரில் கலைஞரின் புகழையும், பண்பையும், பணியையும் வலம்வரச் செய்துள்ளார் கவிஞர். இவை கலைஞருக்குச் சூட்டில் கவிமாலையாக அமைந்து மணம் சேர்க்கிறான். ''பகைகண்டால் யுத்தம் செய்; அது தொடர்ந்தால் நித்தம் செய்; பள்ளி சென்றால் புத்தகம் செய். நாடும் வீடும் சுத்தம் செய்; அநீதி கண்டால் சத்தம் செய்; கொள்கைக்காக மனதைப் பித்தம் செய்; தோழமை கண்டால் முத்தம் செய்''என்றவாறு சந்த அழகோடு அமைந்த கவிதைகளும் எதுகை, மோனையும், உவமை உருவகங்களும் இணைந்து அழகூட்டும் கவிதைகளும் கலைஞரின் புகழையும், பெருமையும் அளவிட்டுக் காட்டிட முனைகின்றன.