தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் குமுகாயத்திற்கும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய தொண்டு மகத்தானது. உலகமெங்கும் வாழும் கோடான கோடி தமிழ்ப் பெருமக்களின் பாதுகாப்பரணாக அவர்கள் ஏகோபித்த குரலாக வாழ்ந்து மறைந்தவர் முத்தமிழ் அறிஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள்.
''மக்களை நேசி, மக்களுக்கு ஊழியம் செய், அகந்தையை ஒழி'' என மாவோ செல்லும் இடமெல்லாம் சொல்லி வந்ததைத்தான் தந்தை பெரியாரும் தமிழர்களுக்குச் சொல்லி வந்தார். தந்தை பெரியாரின் தலைமையில் பயணம் செய்த அண்ணாவும், கலைஞரும் தமிழர்களை நேசித்தனர். தமிழர்களுக்கு ஊழியம் செய்தனர். நான் என்னும் அகந்தையை அழித்து நாம் என்னும் ஒற்றுமையை நிலைநாட்டினர்,