இது ஒரு அரசியல் நாவல். இன்று வரை இந்திய மொழிகளில் இதுபோன்ற நாவலை எந்த எழுத்தாளரும் எழுதியதாகத் தெரியவில்லை. '' நல்லகதை என்றோ, கெட்ட கதை என்றோ எதுவும் இல்லை. நல்ல நடைதான் வாசகரை வளைத்துப்போகும்'' என்னும் அமெரிக்க எழுத்தாளரின் எண்ணத்தை மெய்ப்பிப்பதாக நான் எழுதிய இன்னும் விடியவில்லை என்னும் நாவல் கதையாலும், நடையாலும் படிப்பவரைப் பற்றி எரியச் செய்யும் என்பதை மூன்றாம் கண் திறந்து சொல்லுகிறோன். உண்மையா? பொய்யா? என்பதை முடிவு செய்யுங்கள்.