கணேஷ் - வசந்த் தோன்றும் நீண்ட நாவல்களில் இது முக்கியமானது. இதன் இறுதியில் நீங்கள் எதை நம்புகிறீர்கள் - அறிவியலையா பேய் பிசாசுகளையா என்ற கேள்வி விடையளிக்கப்-படாமலேயே இருக்கிறது என்று சிலர் குறைபட்டுக்கொண்டார்கள். அந்தக் கேள்விக்கு அடுத்த நூற்றாண்டிலும் அறுதியாக பதில் கிடைக்காது என்பதே எனது கருத்து. - சுஜாதா