சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களுள் இந்திராகாந்தி முக்கியமானவர். இந்தியாவின் '' இரும்புப் பெண்மணி '' என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் என்னும் சிறப்புக்கும் உரியவர். சுதந்திரப் போராட்ட வீரர் மோதிலால் நேருவின் பேத்தி, ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் என்னும் சிறப்புக்கெல்லாம் உரியர். பலத்த அரசியல் பின்னணியோடு இவர் அரசியல் பின்னணியோடு இவர் அரசியலில் நுழைந்திருப்பினும், இவர் கடந்து வந்த பாதைகள் கடினமானவை. இவரது மறைவு நிகழ்வில் தொடங்கும் இந்நூல், மாபெரும் இந்த இமாலயம் கடந்துவந்த கடினமான பாதைகளை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.