தமிழ் திரையிசையில் நிலவைப் பற்றிய பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். நிலவை மையமாக வைத்து படைக்கப்பட்ட 18 பாடல்களின் இனிமை எடுத்து காட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் காதலே பிரதானமாக இடம் பிடித்துள்ளது. பாடல் வரிகளை முழுமையாக தந்து, பதங்கள் பிரித்து, அதற்கு இணையான சங்கதிகள் சொல்லப்பட்டுள்ளன. அவை இடம் பெற்ற திரைப் படம், பாடியோர் குறித்து தகவல்கள் தரப்பட்டுள்ளன. பாடல் வரிகளுக்கும், வார்த்தைகளுக்கும் இலக்கிய மேற்கோள்கள் காட்டி நயம்பட எடுத்துரைக்கப் பட்டுள்ளது. செவி வழியே வழிந்தோடும் கானங்களுக்குள் இருக்கும் கருத்துகளை விவரிக்கிறது. திரைப்பாடல்களில் இயற்கை வர்ணனையை விரும்புவோருக்கு ஏற்ற நுால். – ஊஞ்சல் பிரபு