"மகாத்மா காந்தி கனவு கண்ட சுதந்திரம் கிடைத்த இருபது வருடங்களுக்குப் பின் ஒரு நாள். நள்ளிரவு .... இரண்டு பெண்கள் நகரத்தின் இரண்டு மூலைகளிலிருந்து தனித்தனியாக வெளியே வந்தார்கள். ஒருத்தி நகரத்தின் கிழக்கேயுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவிலிருந்தும், இன்னொருத்தி மயானத்துக்கு அருகிலுள்ள துர்காபாய் தேஷ்முக் நகர் சந்திலிருந்தும் வந்தார்கள்."