என்றும் இளமையாக இருக்க வேண்டும்... முதுமையே வரக்கூடாது என்பது பிரபலங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல, சாமான்ய பெண்களும் அத்தகைய அழுத்தங்களைதான் சந்திக்கிறார்கள் என்று அமலா தெரிவித்தார்.
நான் பல தளங்களில், துறைகளில் பணிபுரியும் பலரை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடும் போது தெளிவாக தெரிகிறது. இப்போதெல்லாம் தோற்றம் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது என்கிறார் அமலா