தமிழ் நாடு கிராம சபை (கூட்டுதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள் 1998 மற்றும் அவ்விதிகளுக்கு 2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருத்தங்களில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாணையின்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிராம சபை நடத்துவதற்கான நெறிமுறைகள்
குறைவெண் வரம்பு,
கூட்டப்பொருள்,
வருகைப் பதிவு,
தீர்மானங்கள் இயற்றுதல்
மற்றும் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளைத் தயார் செய்தல்
ஆகியவை குறித்த நெறிமுறைகள் இவ்விதிகளில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.