ஊராட்சிகளின் கடமைகளும் பொறுப்புகளும், ஊராட்சி மன்றக்கூட்டங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சியின் நிதிகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல், ஊராட்சிகளின் வருவாய் இனங்கள், வரியினங்கள், தொழில் வரி, செலவினங்கள், தலைவர், உறுப்பினர் பயணப்படி, ஊராட்சியின் வேலைகள், செயல்படுத்தும் முறை, ஊராட்சிகளுக்கான படிவங்கள் மற்றும் பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகள், ஊராட்சித் தலைவர் ஊராட்சி நிர்வாகத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற பல செய்திகள் 'சிற்றூராட்சி நிர்வாகம்' என்னும் இந்நூலில் விளக்கப்படுள்ளன.