அதிகாரப் பரவலின் அடிப்படைகள் என்னும் இந்நூலின் நோக்கம் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி ஒரு சரியான பார்வையை உருவாக்குவதே ஆகும். அதிகாரப் பரவலில் பங்கெடுக்கக்கூடிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள், சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், அறிவு ஜீவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும் தகவல்தொடர்புச் சாதனங்களை வரை எப்படித் தங்களுடைய பங்களிப்பைச் செய்கிறார்கள். அதன் அடிப்படையில் நம் உள்ளாட்சிகள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன என்பனவற்றைப் படம்பிடித்துக் காட்டி, அவை செல்ல வேண்டிய தடத்தினைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்நூல்.