இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற புரட்சியாளன் புரட்சியின் ஆகச் சிறந்த பிம்பம் சே குவாராவின் வாழ்க்கை வரலாறு, தெள்ளிய, துல்லிய விவரணையோடு இந்நூல் வடிவில் நுணுகி ஆராய்ந்து விறுவிறுப்பான நடையில் புனைப்பட்டுள்ள இந்நூல் சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை புத்தம் புதியதொரு உயிர் துடிப்புடன் நகர்த்துகிறது. 1960 காலகட்டத்தில் சிறந்துயர்ந்து துவங்கிய இலக்கிய வடிவங்களுக்கு மாற்றான மட்டரக அரசியல் நையாண்டி நடையை படைப்பாளன், தகுந்த ஊடுபாவாக கைக்கொண்டு யாத்துள்ள இந்நூல் "சே" வின் புரட்சிகரமான போராட்டத்தை பதிவு செய்கிறது.
படைப்பாளனாகிய ஸ்பெயின் ரோட்ரிகஸின் கலைப்டைப்பு "சேயினது வாழ்க்கையையும் அதனை வடிவமைத்த, சேயின் லத்தீன் அமெரிக்க நாட்டு மோட்டார் சைக்கிள் சாகசப் பயணம், ஃபிடலின் புரட்சி இயக்கத்தின் தலைவனொருவனாக உயர்ந்தமை, அவனது ஆப்ரிக்கப்பயணங்கள் பொலிவியாவில் கையறு நிலையில் சே மேற்கொண்ட, அவனை மரணத்துக்கு இட்டுச்சென்ற சவாலான புரட்சிப்பணி மற்றும் சே வீட்டு சென்ற வீறார்ந்த மரபு இவற்றை ஒளிர மிளிர வெளிக்கொணர்கிறது. "ரோடரிகள் இந்த மட்டரக அரசியல் நையாண்டி படைப்பு நடையின் தனித்துயர்ந்து நிற்கும் இலக்கிய நாயகர்களில் ஒருவர். அவரைப்போலவே அவரது இப்படைப்பும் தாழாது மேலுயர்ந்து நிற்கிறது '