
கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய்
Karaiserkum Uyirthuduppai
₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அருணாசலம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417195
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் ; பிராணக்குடும்பத்தில் பிறந்து, பூணூல் அணிந்தபிறகு , உலக மெய்யியலை அறிந்ததன் விளைவாக , பூணூலைக் கழற்றியெறிந்து பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து , தங்கள் வாழ்க்கையையே சமூக வழக்கறிஞர் அமரர் என்.டி.வானமாமலையும் ஒருவர். தாம் செய்வது எந்தப் பணியாக இருந்தாலும் , அந்தப் பணியின் வாயிலாகவே, பொதுவுடைமை இயக்கப் பணியைத் திறம்படச் செய்ய முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டியவர் என். டி. வானமாமலை. அவர் குற்றவியல் வழக்குரைஞராகப் பணியாற்றிய வேளையில் , அப்பணியைச் சமூகப் பணியாகச்செய்ய வேண்டும் என்பதற்கு இலக்கணங்களை வகுத்துக் கொடுத்த முன்னோடி ஆவார். மனித உரிமைகளை நிலைநிறுத்த - பிரத்தியேகமாக, ஏழைகளுக்காகத் தியாகம் செய்த சமதர்ம சிந்தனையாளர், இடதுசாரி சிந்தனைகள் நிறைந்த தேசப் பற்றாளர், சமத்துவ சிந்தனையாளர் என்கிறவகையில் மதராஸ் மாநிலத்தின் இந்திய சோவியத் கலாசார கழகத்தின் தலைவராக இருந்து நீண்ட காலம் பணியாற்றினார். அப்போது நான் தேசிய அளவில் இஸ்கஸ்-ன் தலைவராக இருந்தேன். அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளில் நாங்கள் இருவரும் ஒரே 'போக்கு' உடையவர்களாக இருந்தோம். எங்கள் கருத்தோட்டங்கள் எப்போதும் ஒத்துப்போவனாகவே இருந்தன. மறைந்த மோகன் குமாரமங்கலம் எங்கள் இருவரின் நெருக்கமான நண்பர். சமூகத்தின் எல்லாத் தரப்பினர்களும் ஒரு முறையாவது புரட்டிப் பார்க்க வேண்டிய நூல்.
- பதிப்பகத்தார்
- பதிப்பகத்தார்
