book

சுந்தர காண்டம்

Sundara Kandam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் கன்ம பலனை நுகர்ந்து வாழ்கின்றன. இவ்வுயிர்கள் ஏழு பிறவிகளைக் கொண்டு இயங்குவதாகச் சான்றோர்கள் பகர்வார்கள்,ஏழு,பிறவிகளாக தேவர்,மனிதர்,விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவற்றை உரைப்பர். இவற்றில் மக்கள் பிறவியே மேன்மையுடையது. பிறவித்துன்பத்தை நீக்கிப் பிறவாப் பெரு நெறியை அடைய வேண்டுமானால் மூவகை ஆசைகளாகிய மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றைத் துறக்க வேண்டும்.

இத்தகைய ஆசைகளின் காரணமாக விளையும் துன்பங்களை சான்றோர்கள் இதிகாச இலக்கியங்களாகிய இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்கள். தவிரவும் இறைவன் திரு அவதாரம் செய்து மக்களை நன்னெறிப்படுத்திய வரலாற்றினை இந்நூல்கள் சாற்றும். இவற்றில் கம்பராமாயணத்தில்  சுந்தர காண்டமும், மகாபாரதத்தில் விராட பருவமும் பாராயணம் செய்வதற்கு உரிய பகுதிகளாக ஆன்றோர் வகுத்துள்ளனர். இவற்றுள் கம்பராமாயணம் சுந்தரகாண்டம் இங்குப் பாராயண உரைநூலாக வெளியிடப்படுகிறது.