ஒரு தெய்வம் தந்த பூவே
Oru Theaivam Thantha Poovea
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜி நிக்சன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartபொழுது புலர்ந்து கொண்டிருந்தது. இரவைக் குளுமைப்படுத்தியது போதுமென்று நிலவு ஓய் வெடுக்கச் சென்றுவிட்டது. சூரியன் தன் பணியைச் செவ்வனே செய்திட மேகக் கூட்டத்தினூடே சிற்றொளி பரப்பியபடி கடமையாற்ற இதோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கோ தொலைவில் சேவல் கூவும் சப்தம் கேட்டது. பேப்பர்காரரின் சைக்கிள் மணியின் ஓசை ஒலித்து பின் தேய்ந்தது. தெருமுனைக் கோவிலின் மணியோசையும் சிறிது கேட்டது.