ஒளி பரவட்டும்
Oli Paravattam
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி. சிவம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :192
பதிப்பு :5
Published on :2011
ISBN :9788190853576
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Add to Cartகடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வொரு பூவிலும் இறைவனின் சிரிப்பு, ஒவ்வொரு உயிரிலும் இறைவனின் தகவல் வெளியாகிறது. கடவுளைப் பிரச்சாரத்தின் மூலம் கற்றுக்கொள்வது. செயற்கை முறை கருத்தரிப்பு (Artificial insemination) போல. உள்ளிருந்து அனுபவித்து உணர்வது. காதல் இதயங்களின் கல்வியில் விளைந்த கருணைக் கொடை போல.
மழைத்துளி தோன்றி கடலைத் தேடும் மனோ நிலையில் மனம் கடவுளை அடைவதையே ஆன்மிக அனுபவம் என்கிறேன்.
இருப்பது போல் தோன்றி இல்லாமல் போவது நான். இல்லாத்து போல் தோன்றி இருப்பதை உணர்த்துவது கடவுள்.
பரம்பொருளைத் தேடுவதும் கிடைக்கவில்லையே என்று வாடுவதும் இடை இடையே கூடுவதும் அதன் இடைவெளியில் பாடுவதும் ஞானிகளின் வழக்கம். இதுவே இந்தப் புத்தகத்தின் சுருக்கம்.