சம்மனசுக்காடு
Sammanasukaadu
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. பிரான்சிஸ் கிருபா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915629
Add to Cartபிரான்சிஸின் அலைபேசி எண்கள் எதுவும் நிரந்தரமில்லை. ஆறு எண்கள் என்னிடம் இருக்கின்றன. எதனிலும் இன்றைக்குக் காலை அவர் கிடைக்கப்போவதில்லை. ஏழாவது எண் அவராகக் காட்சியளிக்கும்போது கிட்டக்கூடும்.
புனித பிரான்சிஸை மலையாளத்தில் ‘புண்ணியாளன் பிரான்சிஸ்’ என்பார்கள். மக்கள் மொழியில் ‘பிராஞ்சி’;மூத்தோர் எனில் ‘பிராஞ்சியேட்டன்’. எமது மொழியின் பிராஞ்சியேட்டன்களில் ஒருவன் பிரான்சிஸ்; மிக அரிதாய் நிகழும் அற்புதம்; வால் நட்சத்திரம்.
நடுங்கும் கைவிரல்களால் ஸ்வெட்டர் பின்னும் மூதாட்டியின் கரங்களைப் போன்றது பிரான்சிஸின் கவிதை உலகம். அது பதற்றமுறுகிறது. பதற்றமுறாதவன் எப்படி கவிதை எழுதமுடியும்? பதற்றமே இன்றைய நம் வாழ்வின் சாரம்.
நீண்ட இடைவெளிக்குப் பின், தனது கவிதைகளின்வழி நமக்கு முகங்காட்டுகிறார் பிரான்சிஸ்.