book

கி. ராஜநாராயணன் கிராமியக் கதைகள்

Kiramiya Kathaigal

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :5
Published on :2010
Add to Cart

இந்திய இலக்கியத்தின் மிகப் பழமையான உருவம் கதைதான். கவிதை தோன்றும் முன்னர் கதைகள் தோன்றின. இக்கதைகளே கவிதையின் பொருளாயின. எழுதப்படாத கதைகள் வழி வழியாகச் சொல்லப்பட்டு வந்தன. இவை சிற்சில பகுதிகளில் தோன்றி நாடு முழுவதும் பரவின. பின்னர் இந்தியர் வாணிபம் செய்யச் சென்ற அயல் நாடுகளிலும் பரவின. இக்கதைகளை எழுத்துத் தோன்றிய பின் தொகுத்து சட்டக் கதையில் பொதிந்து நூலாக இணைத்தனர். இதற்கு உதாரணமாக 'பஞ்ச தந்திரத்'தைச் சொல்லலாம். ஒரு கதை முதலில் ஆரம்பமாகும். அக்கதையில் வரும் பாத்திரங்கள் பல உபகதைகளைச் சொல்லுவார்கள். உபகதைகளில் வரும் பாத்திரங்கள் வேறு பல உபகதைகளைச் சொல்லுவார்கள். முதல் கதை சட்டக் கதை எனப்படும். இவ்வாறே ஜாதகக் கதைகள், கிரேக்கக் கதைகளான ஈசாப்பின் கதைகள் முதலியன வழங்கி வந்தன.