கேள்விகள் பதில்கள் (ஞாநி)
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞாநி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2014
Add to Cartஇந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சயமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமூக நல ஆர்வலர், (கொஞ்ச காலம்) அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு. ஞாநி அவர்கள். இவர் பல கட்டுரைகள், நாடகங்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார்.
இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடம் எடுத்த பேட்டியின் தொகுப்புதான் இது. ஒவ்வொரு பேட்டியும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பத்திரிகையில் வந்தது. இதில் மொத்தம் 15 பிரபலங்களின் பேட்டிகள் உள்ளன. திரைத்துறை, எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், ஈழ மண்ணைச் சேர்ந்தவர், அரசியல்வாதி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள்.