
மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு)
Menmaiyana Vaal
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Add to Cartபெருமானார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றி அனேக நூல்கள் எழுதப்பட்டு விட்டன. இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஓர் அரசியல் தலைவராக, ஓர் இராஜதந்திரியாக அவர்கள் எப்படி இருந்தார்கள்; வாழ்நாளில் ஒருமுறைகூட மூன்று வேளையும் வயிறார உண்ணாத உன்னதத் தலைவரை இந்த உலகம் கண்டது உண்டா. கைசர் களுக்கும், கிஸ்ராக்களுக்கும், ரோமானிய பாரசீக மன்னர்களுக்கெல்லாம் கிடைக்காத மரியாதை அவ்வளவு எளிய மனிதராக வாழ்ந்த அவர்களுக்கு எப்படி கிடைத்தது?தனக்காக உயிரைக் கொடுக்கும் ஒரு சமுதாயத்தை அவர்களால் எப்படி உருவாக்க முடிந்தது? அவர்களுடைய மேதை எவ்வாறு செயல்பட்டது? இந்தக் கோணத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் கூறுகளை பார்க்கும்ன நூல்கள் குறைவு.
இந்நூல் பெருமானாரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காலவரிசைப்படி சொல்லிச் செல்லும் வரலாற்று நூல் அல்ல. மாறாக பெருமானாரின் அரசியல் பரிமாணத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தும் ஒரு முயற்சி.
அவர்களுடைய வெளியுறவுக் கொள்கைகள், உலகின் பல ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுப்பிய கடிதங்கள், செய்துகொண்ட உடன்படிக்கைகள், எழுதிய சாசனங்கள், அனுப்பிய தூதுக்குழுக்கள் இப்படி செல்லும் இந்நூல்.
