book

திருமறையின் தோற்றுவாய்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸையித் இப்ராஹிம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

தோற்றுவாய் அத்தியாயத்தின் ஏழு வசனங்களையும் அவற்றின் உட்பொருளையும் ஒருவர் அறிந்து கொண்டால் குர்ஆன் முழுவதிலும் கூறப்பட்டுள்ள மார்க்க விதிகள் அனைத்தையும் அவர் தெரிந்து கொள்ள முடியும். இவ்வேழு வசனங்களும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஐங்கால தொழுகையில் ஓதும் படியாக அமைக்கப் பட்டுள்ளது. மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அரிய நூல்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் இந்த நூலும் ஒன்று. இவ்விரிவுரை முஸ்லிம்களின் அறிவுத் துறையில் புதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்குகின்றது. வேற்றுமதத்தவர் இஸ்லாம் மார்க்கத்தை நல்லமுறையில் அறிவதற்கு தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் அரபி, உருது மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அவருக்கே உரிய சொல் வளமும் இலக்கியச் சுவை நலமும் கலந்த செஞ்சொல் ஓவியங்களை அப்படியே மொழிபெயர்ப்பில் தருவது என் போன்றோருக்கு எளிதல்ல. எனினும் இறைவன் திருவருளால் கூடுமானவரை மௌலானாவின் கருத்தோட்டமும் உணர்ச்சிப் பெருக்கும் குன்றாமல் அமையும்படி மொழிபெயர்க்க முயன்றுள்ளேன். இறை தந்த அருள்மறையின், இன்பத் திருமறையின் இப்பணி மிகவும் பெரிது என்பதை உணர்ந்து என் நெஞ்சம் அஞ்சியது. மௌலானாவின் மாண்புமிக்க விரிவுரையை தமிழில் பெருமக்கள் படித்துப் பயன்பெற வேண்டும். அதற்கு ஆவண செய்தல் வேண்டும் எனும் ஆர்வம் மிஞ்சியது அருளாளன் அருள்புரிவான் எனும் நம்பிக்கையும் அரும்பி வளர்ந்தது; இந்நூலும் மலர்ந்தது. இவ்வாறு இந்நூலைத் தமிழாக்கம் செய்த பேராசிரியர் சையத் இப்ராகிம் அவர்கள் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.