book

மிதந்திடும் சுய பிரதிமைகள்

MithanThidum Suya Pirathimaikal (Sinak Kavithaikal)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி சங்கர்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :327
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189912437
Add to Cart

சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்சப் பங்களிப்பு இதுதான் என்று தோன்றியது. அத்துடன், சீனக் கவிதை மொழி பெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் அந்தத் தேடலே அவருக்கு உதவியுள்ளது. இது தமிழுக்குப் புதிது. வெறுமே ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீனக்கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அவற்றைவிட இந்த நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுகளுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். மிதந்திடும் சுய பிரதிமைகள் அதற்கான பல வெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. (வ,ஐ.ச ஜெயபாலன்)