book

டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள்

Dolstoy Pon Mozhigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :59
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788188049332
Add to Cart

''ஊருக்கு உபதேசம், போடுவது வேளியவேசம்'' என்று சொல்லும் நிலையில் யார் வேண்டுமானாலும் அறக்கருத்துகளை அள்ளி வீசிவிடலாம். ஆனால் உள்ளத்தால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் சொல்லும் மொழிகள் பொன்மொழிகள் ஆகின்றன. மற்றவர்கள் சொல்லும் புத்திமதிகள் புண் மொழியாகவே கருதப்படுகின்றன. இந்நூலில் டால்ஸ்டாய், பதேயிவ்ர ஷோலகோவ் ஆகியோரின் பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. பட்டறிவு மிக்க இவர்களின் படைப்புகளில் நற்செய்திகளை வழங்கியதோடு நின்றுவிடாமல் வாழ்ந்து காட்டியவர்கள். மும்மணிகளின் பொன்மொழிகளை எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார். டால்ஸ்டாயின் படைப்பான 'போரும் அமைதியும்'. பதேயிவ் எழுதிய 'வெற்றி முரசு' ஷோலகோவ் எழுதிய ' கன்னி நிலம்' ஆகிய நூல்களிலுருந்து பொன்மொழிகளைத் தொகுத்துள்ளார்.

வறுமை நிலையில் வாடுகின்ற விவசாய மக்கள் மத்தியில் வளமாக வாழ விரும்பாதவர் டால்ஸ்டாய். ஆடம்பர வாழ்வை வெறுத்து, மனைவியை விட்டுப் பிரிந்து இறுதி நாட்களைத் தனிமையில் வாழ்ந்து முடிக்க விரும்பியவர், காந்தியடிகளால் குறுநாதர் என்று போற்றப்பட்டவர்.