book

அவர்கள் செய்த விந்தைகள் 100

Avargal Seitha Vinthaigal 100

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஸ்ரீநிவாஸன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :பொது
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'அவர்கள் செய்த விந்தைகள்' என்ற உடனேயே 'யார் அந்த அவர்கள்?' என்ற கேள்வி எழும். நம் நாட்டைத் தவிர, மற்ற நாடுகளில் அன்று முதல் இன்று வரை செய்யப்பட்ட கட்டட மற்றும் தொழில் நுட்ப விந்தைச் செயல்களைக் கூறுவதுதான் இந்த நூல். பிரமிடுகள் உட்பட உலகின் ஏழு அதிசயங்களில் ஆறும், அன்று அமைக்கப்பட்ட சூயஸ் கால்வாய், சுருங்கைகள் முதல் இன்று ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் விமான நிலையம் வரை நூறு தகவல்கள் இதிலே தரப்பட்டுள்ளன. பிரமிட் என்பது கல்லறை அல்லது நினைவுச் சின்னம். சதுர மான அடித்தளமும் நான்கு புறமும் முக்கோண வடிவச் சுவர்கள் மேற் புறமாக சரிவாகச் சென்று சிகரமாக முடிவது. பண்டைய எகிப்தியர் களால் தங்களது பாரோக்களுக்காக (மன்னர்களுக்காக) கட்டப்பட்டவை களே வரலாற்றுப் புகழ் பெற்ற பிரமிட்டுகளாகும். உலகில் பண்டைய பாபிலோனியா, அஸ்ஸிரியா, மெக்ஸிகோ போன்ற இடங்களிலும் பிரமிட்டுகள் கட்டப் பட்டுள்ளன. ஆனால் அவைகள் கோவில்கள் அல்லது வழிபாட்டுக் கூடம் அல்லது வானியல் ஆய்வுக் காகப் பயன்படுத்தப்பட்டன.