விடுதலைப் போரில் தமிழகம் இரண்டாம் பாகம்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் மா.பொ. சிவஞானம்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :624
பதிப்பு :9
Published on :2012
Add to Cartவிடுதலைப் போரில் தமிழகம்" என்ற இந்நூல் வரலாற்றுப் பதிவுகளின் கருவூலம் எனலாம். இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்ந்தால் அன்னிய நாட்டினரால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், தமிழகத்தை விட்டுவிட்டு எஞ்சிய இந்தியாவை மட்டும் அடிமைப்படுத்தியதென்றொ, எஞ்சிய இந்தியாவை விட்டுவிட்டு தமிழகத்தை மட்டும் அடிமைப்படுத்தியதென்றொ சொல்வதற்கில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மொகலாய ஆக்கிரமிப்பும் சரி; பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆக்கிரமிப்பும் சரி; வட இமயம் தொடக்கி தென் குமரி வரையுள்ள இந்தியா முழுவதையும்தான் அடிமைப்படுத்தியதனை வரலாறு காட்டுகிறது. ஆகவே, தமிழன் தனது விடுதலைக்காக போராடியதனை தேச பக்தியோடு அணுகி அனைத்திந்திய கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டியது அவசியமாகிறது. அப்படித்தான் இந்நூலும் படைக்கப்பட்டுள்ளது. "விடுதலைப் போரில் தமிழகம்" என்னும் பெயரைப் பெற்றிருப்பினும், இந்திய விடுதலைப் போர் சம்பந்தப்பட்ட அனைத்திந்திய நிகழ்ச்சிகள் எல்லாம் இதிலே தரப்பட்டுள்ளன. இதனைப் படித்து முடித்தால், இந்திய விடுதலைப் போர் முழுவதையும் படித்தது போன்ற மனநிறைவு ஏற்படும். இது இந்நூலுக்குள்ள தனிச் சிறப்பு ஆகும்.