book

பாஞ்சாலி சபதம்

Panjali Sabatham

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாகவி பாரதியார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188048021
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தைக் கண்டு பாரதி ஆவேசம்கொண்டார். பாரதியின் கண்களில் ஆங்கிலேயர் கௌரவர்களாத் தெரிந்தனர். கௌரவர் சபையில் நாட்டை இழந்து தலைகுனிந்து நின்ற பாண்டவர்கள் இந்தியர்களாகத் தெரிந்தார்கள். துரியோதனன் பாஞ்சாலியைச் சபையில் நிறுத்திதுகிலை உரிந்து அலங்கோலப்பட்டதைப்போல் இருந்தது. பாஞ்சாலிக்குக் கண்ணபிரான் ஆடை வழங்கி மானம் காத்ததுபோல் காந்திமகான் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர வந்தார் என்று தீர்க்கதரிசனம் கொண்டார்.

அவரது தீர்கதரிசன உணர்வுதான் பாஞ்சாலி சபதமாக வடிவெடுத்தது. பாரதியின் இதயக் குமுறல் பாஞ்சாலியின்மூலம் சபதமாக உருப்பெறுகிறது. பாரதப்போரில் பாண்டவர்கள் வென்றதைப்போல் விடுதலைப் போரில் இந்தியர் வென்று ஆனந்த சுதந்திரம் அடைவார்கள் என்று அன்றே கனவு கண்டார்.

பாரதியார் கவிதைகளில் பாஞ்சாலி சபதம் பகுதியை வாசகர் வசதி கருதி தனியாகச் சிறு நூலாக அச்சிட்டு வெளியிடுகிறோம். பல நல்ல நூல்களைப் படைத்தும் குறைந்த விலைகளில் நல்ல நூல்களைப் பதிப்பத்தும் தமிழுலகுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமகனார் வை. கோவிந்தன் அவர்களைப் பாரதியின் புதல்விகளான திருமதி தங்கம்மா பாரதி, திருமதி சகுந்தலா பாரதி இருவரும் சந்தித்து, பாரதியின் கவிதைகளை வெளியிடக் கேட்டுக்கொண்டதை ஏற்று அவர் தொகுத்த ' மகாகவி பாரதியார் கவிதைகள்' என்னும் நூலிலிருந்து இப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டுப் பிழையின்றி வெளியிடப்பட்டுள்ளது.