book

கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை

Komaaligal Circusil Mattum Illai

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கதைப்பித்தன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :113
பதிப்பு :
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

 பின்தங்கிய கிராமங்களின் வறட்சியையும் வாழ்க்கைத் துயரங்களையும் மையமாக வைத்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கதைகள் எழுதிவரும் கதைப்பித்தன் ஒரு கவிதைப் பித்தனுங்கூட, இவர் பொதுப்பணித் துறையிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பொறியாளர். இராஜபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். இரா. கதைப்பித்தன். என்பதில் இரா என்பது இராஜபாளையத்தைக் குறிப்பதாகும்.

 சி. இராஜநாராயணன், வல்லிக்கண்ணன் போன்ற படைப்பாளிகளாலும் தி.க.சி. போன்ற விமர்சகர்களாலும் பாராட்டப்படும் இவரது எழுத்தில் எளிமையும் எதார்த்தமும் நிமிர்ந்து நிற்கின்றன. உண்மையும் நம்பிக்கையும் நேர்கொண்டு பார்க்கின்றன.

 கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது ' தொழில்' என்னும் சிறகதை முன் அமைதியுடன் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரால் ' வறுமையின் நிறம் சிவப்பு' படத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.