book

ஒத்திகை

Othigai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. திலிப்குமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123413969
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

கனவுகளும் கற்பனைகளும் மிகவும் இனிமையானவை. மனித வாழ்க்கையை மிகவும் இன்பம் நிறைந்த வாழ்க்கையாகச் செய்வன அக்கனவுகளும் கற்பனைகளுமே! ஆகவே, மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனும் நாடோறும் ஆயிரம் ஆயிரம் கனவுகளைக் காண வேண்டும். கற்பனைத் தேரில் ஏறிப்பெருமையுடன் உலவுதல் வேண்டும். கனவு காணாதவன் பாவி; கற்பனை செய்யத் தெரியாதவன் முட்டாள்.

 மக்கள் வாழ்க்கையில் கங்கை போலவும் காவிரிபோலவும் கனவுகளும் கற்பனைகளும் உருவாகிப் பெருகுவதற்கு உறுதுணை செய்வது காதலேயாகும். தூய்மையான பண்புகளைக்கொண்ட ஓர் அழகிய இளம் பெண்ணின் நெஞ்சத்தைத் தனக்குரியதாக ஆக்கிக் கொண்ட காதலன் ஒருவன் பெறும் இன்பம் இந்த உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளுகின்ற பேறுபெற்ற ஒரு மாபெரும் வேந்தன் பெறுகின்ற இன்பத்தினும் மேலானதாகும்.