செல்வமே சிவபெருமானே என்ற இந்த நூல் சித்தர்களின் அருளாசியோடு
எழுதப்பட்டது.எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச்
சொல்லும் கட்டுரைகள் அடங்கியது.
நமசிவாய மந்திரமும், திருநீறும், உருத்திராட்சமும் சிவபெருமானாகவே
எண்ணி பக்தர்களினால் கொண்டாடப்பட்டு துதி பாடப்படுகிறது. இவற்றில் நமசிவாய
என்னும் ஐந்தெழுத்து மந்திரம் இந்த உலகத்திற்குத் தேவையான அஷ்ட
ஐஸ்வர்யங்களை அளிப்பதோடு, முக்திபேறான மோட்சத்தையும் தரவல்லது.
விபூதி எனப்படும் திருநீறோ இறைவனின் சின்னமாகவே பக்தர்களினால்
போற்றப்படுவது. இதைத் தரிப்பவர்களுக்கு நோய் விலகும், நலம் பெருகும். இதோடு
இகபர சுகபோக்கியங்களை அளிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டு.
உருத்திராட்சமணிகள் இறைவனின் கண்களாகவே பக்தர்களினால்
கொண்டாடப்படுகிறது. இவற்றில் பல முகங்கள் கொண்ட உருத்திராட்சங்கள்
கிடைக்கின்றன. பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், மந்திர ஜெபம் செய்வதற்கும்
உருத்திராட்ச மாலைகள் உதவுகின்றன.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செல்வமே சிவபெருமானே, வேணு சீனிவாசன், Venu Srinivasan, Aanmeegam, ஆன்மீகம் , Venu Srinivasan Aanmeegam, வேணு சீனிவாசன் ஆன்மீகம், அழகு பதிப்பகம், Alagu Pathippagam, buy Venu Srinivasan books, buy Alagu Pathippagam books online, buy tamil book.