book

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :108
பதிப்பு :3
Published on :2016
Add to Cart

ஆதிசங்கர பகவத் பாதாள் ஏற்படுத்தியுள்ள ஆறுவித வழிபாடுகளில் ஒன்று சாக்தம். ஐந்தொழில் புரிந்து வரும் அன்னை பராசக்தியை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு உய்யும் நெறியாகும். சாக்த வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது ஸ்ரீ சக்கர வழிபாடும், ஸ்ரீ மகாமேரு வழிபாடும் ஆகும்.
யந்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து வழிபடுவது ஸ்ரீ சக்கர வழிபாடாகும். ஸ்ரீ சக்கரத்தைச் சிலை வடிவில் அமைத்து வழிபடுவது மகாமேரு வழிபாடாகும். இந்த இரண்டு வழிபாட்டு முறைகள் சார்பாக அனைத்து விவரங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் சார்பான விளக்கங்கள், பூஜை முறைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியில் மகாமேரு சார்பான விளக்கங்கள், பூஜைகள் முறைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில் வழிபடுவதற்கு ஏதுவாக மந்திரங்கள் மற்றும் சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.