book

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Verukku Neer(Sahitya Academy Viruthu Petra Nool)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380218281
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

பாரத நாடு முழுவதும் காந்தியடிகள் பிறந்த நூறாவது ஆண்டை 1969ல் கொண்டாடினார்கள். அதற்கு முந்திய ஆண்டுகளில் நான் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கவில்லை. 1968ம் ஆண்டின் இறுதியில் நான் சென்னைக்கு வந்தபோது, சுதேசமித்திரன் நாளிதழில் காந்தி நூற்றாண்டை ஒட்டி என்னைச் சில சில கட்டுரைகள் எழுத சொல்லிக் கேட்டார்கள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய இலட்சியங்களைப் பற்றியும் நான் படித்து இருந்தேனே தவிர, நாட்டு விடுதலைப் போரில் எவ்வகியிலேனும் பங்கு கொண்டோ, அப்படிப் பங்கு கொண்டவர்களோடு தொடர்பு கொண்டோ சிறிதும் அநுபவம் பெற்றிக்கவில்லை. எனவே தயக்கத்துடன் ஒப்புக் கொண்டு அடிகளின் வாழ்க்கையைப் பற்றியும் சத்தியாக்கிரகத் தத்துவத்தைப் பற்றியும் வெளிவந்திருந்த நூல்கள் அனைத்தையும் படித்துப் பார்ப்பதென்று முனைந்தேன்.