காந்தள் நாட்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இன்குலாப்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :3
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cartஎன் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும் பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலின் அடையாளம் காட்டவில்லை. எனக்கு இசை தெரியாது. எனக்கு கவிதை வசப்பட்டு வரும்முன்னே பாட்டு வசப்பட்டு இருந்தேன். என்னால் பாடமுடியாது. ஆனால் எனக்குள் எப்போதும் பாடியபடியே இருக்கிறேன். என் இசை எழுத்தாகியது. அதிலும் போராட்டங்களின் கருக்களே என் இசை போராட்டங்களைப் பதிவு செய்துள்ள போதிலும் வெகுமக்களை கருவாகக் கொண்ட நெடுங்கவிதை ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தக் கனவு நாடகங்களாக வடிவம்கொண்டு வருகிறது. --இன்குலாப்