book

காஹா சத்தசஈ (பிராகிருத மொழிக் கவிதைகள்)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர் காளி, பரிமளம் சுந்தர்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2019
Add to Cart

காஹா சத்தசஈ மகாராஷ்ட்ர பிராகிருத மொழியில் எழுதப்பட்ட எழுநூறு காதல் பாடல்களைக் கொண்ட நூல். இது கி.பி. 200க்கும் 450க்கும் இடையில் ஆந்திரா- & மகாராஷ்டிரப் பகுதியிலிருந்து தோன்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதை எழுதியது ஹால என்கிற ஆந்திரத் தேசத்து அரசனென்று ஒரு கருத்தும் இது ஒரு தொகை நூலே என்று இன்னொரு கருத்தும் நிலவுகிறது. இந்நூலுக்கு எழுதப்பட்டிருக்கிற பழைய சமஸ்கிருத உரைகளிலிருந்து இத்தொகை நூலில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்களில் அறுவர் அல்லது எழுவர் பெண்பாற் புலவர்கள் என்பதையும் அறிய முடிகிறது.

காஹா சத்தசஈ யில் இருந்து 251 பாடல்களை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள் சுந்தர்காளி, பரிமளம்சுந்தர் இருவரும். இதில் நமது சங்க அகப்பாடல்களின் எதிரொலிகளைக் காணமுடிகிறது. மொழிபெயர்ப்பாளர் சில ஒப்புமைகளைக் குறிப்பிடுகிறார். அதுவன்றியும் நிறையவே தென்படுகின்றன. அவற்றைக் காண நேர்கையில் நமது பழந்தமிழ்க் கவிவளம் குறித்த மிதப்பு தோன்றுகிறது. பாட்டனார் புகழ் பாடுகையில் வாய் தானாகவே இனித்து விடுகிறது. தவிரவும் திடீரென எதிர்ப்படும் பழைய சிநேகிதரொருவரை ஆரத்தழுவி இன்புறும் மகிழ்ச்சியும் தோன்றுகிறது.

குறுந்தொகை, கலித்தொகை, ஐந்திணை ஐம்பது போன்ற சங்கப்பாடல்களின் சாயல்கள் தென்படுவது போன்றே, காலத்தால் பிந்திய தமிழ்ப் பாடல்களின் சாயைகளும் இதில் தென்படுகின்றன.