அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு (கீழ்வெண்மணிக் குறிப்புகள்)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ.சண்முகசுந்தரம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2018
Add to Cartதொடர்ச்சியான போராட்டங்களின் மூலம், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றனர் கீழத்தஞ்சையின் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இதனை ஏற்க மறுத்த பண்ணையார்களின் வெறிச்செயல்தான் கீழ்வெண்மணிப் படுகொலை. இந்த நிகழ்வு நடந்தேறிய பின்புலங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு செய்திகளை உரையாடலுக்கு உட்படுத்துகிறது இந்நூல். கீழ்வெண்மணி நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்பை எவ்வாறு மதிப்பிடுவது? தந்தை பெரியார் நிலைப்பாடு எவ்வகையில் இருந்தது? ஆகிய பல குறித்தும் இந்நூல் பேசுகிறது. மேலும் இந்நூல் கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்க இலக்கியங்களில் செயல்படும் அரசியல் வக்ரங்களையும் பேசுகிறது. கீழ்வெண்மணி குறித்த உரையாடலில் செ.சண்முகசுந்தரத்தின் இந்நூலுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு.