'இந் நூலாசிரியர் ஜெயதேவன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர். இதற்கு முன் விடியலை நோக்கி, சுயதரிசனம், இன்றைய செய்திகள், கண்ணாடி நகரம் என்னும் நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
இவரது 'சுய தரிசனம் கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் தமிழக அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. ஆனந்த விகடன் ஆசிரியர் துறையில் முன்பு பணியாற்றியிருக்கிறார். ஓடம் என்ற இலக்கிய மாத 'இதழின் ஆசிரியராக இருந்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். இவரது கவிதைகள் இனிய உதயம், காக்கைச் சிறகினிலே, செம்மலர், கணையாழி, உயிர் எழுத்து, சுந்தரசுகன், கல்வெட்டு பேசுகிறது போன்ற பல்வேறு இதழ்களில் தொடர்ந்து வருகின்றன. மரபின் உள்மூச்சை வாங்கி நவீனத்துவ மூக்கில் ' சுவாசிக்கும் இவரது கவிதைகள் வாசிப்பு சுகம் மிக்கன. சமூக அக்கறை உள்ளன. தத்துவ நோக்கில் வாழ்வை அணுகும் இவரின் கவிதைகள் வாசகனை'ஏமாற்றாது என்பதற்கு உத்தரவாதம் தரலாம்.

