book

மகாகவி பாரதியாரின் தடைசெய்யப்பட்ட கனவு

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

வாழ்க்கை - இலக்கியம் - திறனாய்வு - இந்த மூன்றையும் மிகத் தீவிரமாகப் புரிந்துகொண்டு செயல்படும் ஆளுமைகளுள் முதன்மையானவர் க. பஞ்சாங்கம். எவ்வளவு மிகையாகப் புகழ்ந்தாலும், அந்தப் புகழ்ச்சிகளெல்லாம் குறைவானது என்று கருதும் வண்ணம், தொடர்ந்து செயல்பட்டுவரும் பேராளுமை என்றுதான் இருபது ஆண்டுகளுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி, கருதி வருகிறேன். பஞ்சு என்கிற பெயருக்கேற்பவே மிக மென்மையான மனம் எல்லோரும் கருத்தரங்குகளில் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கையில், சாமான்ய மனிதர்கள் அநியாயமாகச் சாலைகளில் மடிகின்றார்களே என மனம் பதைபதைத்தவர். வாழ்க்கை, புனைவுகளால் ஆனது; மொழியால் இந்த வாழ்க்கை, வடிவமைக்கப்பட்டது என்பதையெல்லாம் தெரிந்திருந்தாலும், சூன்யவாதங்களுக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாமல், 'அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேச வேண்டும். என்ற நோக்கோடு, வரலாற்றில் எவ்வாறு இயங்க வேண்டும். என்பதைப் புரிந்து கொண்டு இயங்கி வருபவர். பஞ்சுவின் அனைத்து நூல்களையும் படித்தவன் என்ற முறையில் மட்டுமல்ல; அவரை அருகிருந்து பார்த்தவன் என்ற முறையிலும், இவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.