book

ஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :231
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

சிலப்பதிகாரத் திறனாய்வுகளைக் குறித்து ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த காலகட்டங்களில் (1982-1988) சிலப்பதிகாரம், பழைய தொன்மத்திலிருந்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஒரு படைப்பு என்ற கருத்தை வையாபுரிப் பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறிய நேர்ந்த போது, திராவிட இயக்கம் கற்பித்தபடி அதை ஒரு வரலாறாக அறிந்திருந்த எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் ஆர்வம் தரத்தக்கதாகவும் இருந்தது. எனவே தொன்மங்களைக் குறித்த திறனாய்வு நூல்களைத் தேடத் தொடங்கினேன் தமிழில் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை பேரா.ப.மருதநாயகம் துணை நின்றார். ஆங்கில மொழியில்தான் பல்வேறு நூல்கள் பெருகிக் கிடந்தன. குறிப்பாக நார்த்ராப் ப்ரை-யினுடைய எழுத்துகள் எனக்குள் பெரும் உடைப்பை நிகழ்த்தின் பெரும் வெளிகளைத் திறந்து விட்டன் ஆனாலும் அவைகள் முழுமையாகப் புரியாதவை போலவே இருக்கும் கூடுதலாகப் புரிந்து கொள்ள என்ன செய்ய? என்ற வினா விரட்டியது மொழிபெயர்த்து விட்டால் புரிந்துவிடும் தானே என்ற பதிலைப் பிடித்துக் கொண்டேன் இப்படித்தான் இலக்கியத்தில் தொல்படிவம் என்ற கட்டுரை தமிழுக்குக் கிடைத்தது.