book

பினீஷியப் பெண்கள் (யூரிபிடிஸ்)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்டாலின்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கிரேக்க இலக்கியக் கோட்பாட்டை - தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் -சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் - கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல் - என்று பாரதியார் மொழிபெயர்த்துக் கூறுவதற்கு ஏற்ப இலக்கியச் செறிவுடைய இந்த பினீஷியப் பெண்கள் நாடகம் படிப்போரின் உள்ளத்தை நெக்குருக வைத்துப் பெருக்கெடுக்கும் கண்ணீரால் அவர்களுடைய ஆன்மாவை நீராட்டி மென்மையாக்கும் திண்மை வாய்ந்தது. இலக்கியச் சுடர் ஒளிரும் இணையில்லா கிரேக்க நாடகங்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ்நாடக இலக்கிய வரலாற்றினுக்குப் பொலிவூட்டும் என் இனிய நண்பர் ஸ்டாலின் அவர்களுடைய அரிய முயற்சியின் வரிசையில் இப்பொழுது வெளிவருவது யூரிபிடிஸின் இந்த பினீஷியப் பெண்கள் நாடகம். இதுவரை 16 கிரேக்க நாடகங்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் ஸ்டாலின் அவர்களின் இந்த அயரா தமிழ்ப்பணி அடுத்த கிரேக்க நாடகத்தை மொழிபெயர்க்கும் அரிய முயற்சிக்கு இவரை வழிநடத்திச்சென்று தமிழ்நாடக இலக்கிய வரலாற்றை மேலும் மெருகேற்றும் என்பது திண்ணம்.