யுகங்களின் புளிப்பு நாவுகள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. ஆனந்தன்
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2017
Add to Cartபொதுவாக கவிதைகளின் போக்கு என்பது காலத்திற்கேற்ப புதிய பரிமாணங்களையும் புதிய வெளிகளையும், கவிஞர்களின் அறிவு, தத்துவப் பிண்ணனி, அரசியல் கண்ணோட்டம், கற்பனை வெளி மற்றும் கவித்துவ மனநிலைக்கேற்ப மாறிக்கொண்டே செல்வதாக அமைந்திருக்கிறது.
சமகாலத்தின் ஒரு கவிஞனுக்கான இடத்தை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு, சமூகம், மனிதம், சுற்றுச்சூழல் மீதான அக்கறை, நகரமயமாதல், உறவுச்சிக்கல் குழந்தைப்பருவம் கைவிட்டு போன பாரம்பரியம், உலகமயமாதலால் மாறிக்கொண்டே இருக்கும் கலாச்சாரம் மற்றும் தனிமனித ஏக்கம் என அனைத்து தளங்களிலும் நின்று ஆனந்தனின் இக்கவிதைகள் பேசுகின்றன.
இத்தொகுப்பின் கவிதைகள் படிப்பவர்களிடம் அனைத்து விதமான உணர்வெழுச்சிகளையும் மிகக் குறுகிய நேரத்தில் கடத்தும் தன்மை கொண்டவை. கற்பனையின் சாத்தியங்கள் எல்லாவற்றிலும் நல்ல கருத்தாழமிக்க கவிதைகளை கண்டுவிட முடியுமா என்றால் முடியும் என்பதன் சாட்சிகளாக மு.ஆனந்தனின் கவிதைகள் காணப்படுகின்றன.
- வாசகசாலை