நூறு மின்னல்கள் (பாகம் - 1)
₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாயன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :228
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392876264
Add to Cartவெற்றி... அதனை அடைவதற்கு யாரையும் பலியிடத்தயாராக அவர்கள் அந்தத் தெருவின் இரண்டு பக்கங்களிலும் நிலையெடுத்திருந்தார்கள்.
போக்குவரவுக்கு தடை செய்யப்பட்டிருந்தது அந்த தெரு. நடமாடும் மனிதர்களின் கால்களால் பண்படுத்தப்படும் தனது வாழ்வை இழந்து தனித்திருந்தது அது. பயணிக்கும் மனிதர்களின் குரல்கள் வீசி விட்டுச்செல்லும் ஒலிகளில் இருந்து உலகின் வாழ்வை இதுவரை தெரிந்து வைத்திருந்த அந்த தெருவுக்கு இப்போது எதுவுமே தெரிவதில்லை.உலகை அறியாததால் எழுந்த தாளமுடியாத ஏக்கம் அந்த தெருவின் கரைகளைச் சிதைத்திருந்தன.