book

பொருளியல் அகராதி

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. பூரணம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

பொருளியல் மாணவ, மாணவிகளுக்கும், பொருளாதார விஷயங்களைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்தப் பொருளாதார அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது.நான் அரசுக் கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பொருளியல் துறை ஆசிரியையாகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போது மாணவ, மாணவிகளுக்கு எத்தகைய சந்தேகங்கள் எழுகின்றன என்பதைக் கவனித்து வந்திருக்கிறேன். பொருளாதாரச் சொற்களுக்கான அர்த்தத்தை, வரையறையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பாடத்தைப் படித்தால், அது அவர்களது மனதில் எளிதில் பதிவதையும், புரியாமல் படித்தால் மனதில் பதியாமல் அவர்கள் சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.
இந்தச் சிரமத்தைப் போக்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வி படிப்பவர்களுக்கு உதவியாக ஆங்கிலத்தில் பல பொருளாதார அகராதிகள் உள்ளன. ஆனால் தமிழ் வழிக் கல்வி படிப்பவர்களுக்குத் தமிழில் விளக்கக் கூடிய அகராதி ஏதும், எனக்குத் தெரிந்த வரை, இல்லை. ஆனால் அதற்கான தேவை தொடர்ந்து இருந்து வருகிறது.
எனவே மாணவ, மாணவிகளின் இத்தகைய தேவையை நிறைவு செய்யும் வகையிலும், அதே நேரத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையிலும் இந்தப் பொருளியல் அகராதியை எழுதியுள்ளேன்.