book

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்

Koidilyarin Artha Sashthiram

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publisher
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788184955866
Add to Cart

கௌடில்யர், சாணக்கியர் என்றும் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் அரசியல் பொருளாதார நிபுணர். அரசியல் நிர்வாகத்திற்கு பொருளாதார செயல்பாடுகள்தான் ஊக்க சக்தியாக உள்ளது என்று அவர் கருதினார். ஒரு நாட்டிற்கு இராணுவத்தை விட அதிக முக்கியத்துவம் வருவாய் பெறுவதில் உள்ளது. ஏனெனில் ஒரு சிறந்த இராணுவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் மிகச்சிறந்த வருவாய்க்கான வழிகள் இருக்க வேண்டும். வரி விதிப்பு என்பது குறைவாக இருக்க வேண்டும். பிறகு மெதுவாக வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும். மேலும் மிக முக்கியமாக வரிவிதிப்பு என்பது மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும் என்று கூறினார். வெளிநாட்டு வர்த்தகத்தை மிகவும் ஊக்குவித்த கௌடில்யர் ஒரு வெற்றிகரமான வர்த்தக உடன்பாடு என்பது அனைத்து தரப்பினருக்கும் லாபகரமாக இருக்கும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார். நிலம், நீர் மற்றும் சுரங்கம் இவற்றில் செய்யப்படும் முதலீடுகள் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அனுபவத்தையும், கற்பனையையும் இணைக்கும் பாலமாக இருந்த கௌடில்யர் உண்மையான ஒரு அரசியல்வாதி ஆவார். லஞ்சஊழல்களை தடுத்து நிறுத்த அடிப்படையிலும் வழிமுறைகளிலும் மோப்பம் பிடித்து அடக்கி சமநிலை கொள்வதுதான் ஒரு சிறந்த ஆட்சியின் சிறப்பு என்று கௌடில்யர் கருதினார். கௌடில்யரின் அரசியல் பொருளாதார தத்துவத்தில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட பல அடிப்படைகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும்.