book

இன்று முதல் வெற்றி

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர். கவிதாசன்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

எண்ணங்களை சீரமைத்தால் வாழ்க்கையை நேரமைத்து விடலாம்'' என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் மலர வாழ்ப்பில்லை. ஆகவே எண்ணங்களை சீரமைத்து,வலுவூட்டும் முயற்சியைத்தான் எனது எழுத்துக்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முடியும் என்றால் முடியும் -உன்  முயற்சிகள் தொடர்ந்தால் முடியும் வெற்றியின் விடியல் தொடரும் -அது வியர்வையில் விலாசம்  எழுதும். வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு .இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வெற்றியடைந்து சமூதாயத்தையும்  வெற்றியடைச் செய்யலாம். மேலும்  உலக வரலாறு என்பது சாதித்த சில மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆம் நீங்கள் நினைத்தால் வரலாறு படைக்கலாம். அதற்குத் தன்னம்பிக்கையும் திட்டமிட்ட உழைப்பும் தேவை. ஏனென்றால் நமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கையாகிய தன்னம்பிக்கை ஒருவருக்கு இருந்தால் அவரால் எதையும் சாதிக்க முடியும். ஆம் முடியும் என்று துணிந்துவிட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும். எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கின்றது. உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். நிச்சயம் சாதிப்பீர்கள்.