book

மனமே! பயமேன்?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2014
Out of Stock
Add to Alert List

“சிறிதளவு துணிவின்மையால் தம் வாழ்வைப் பாழ்பண்ணிக் கொண்டவர் பலர். அத்தகைய சிலரைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது எண்ணினேன், ஏன் இவர்களுக்காக ஒரு நூல் எழுதக்கூடாதென்று. அந்த எண்ணவித்து என் நெஞ்சுள் வெறுமனே கிடக்கவில்லை. அது வளர்ந்தது. துணிவைத் துவைப்பது எது என ஆராய்ந்தேன். அச்சம் என்று பதில் கிடைத்தது எனக்கு. அதன்பின் அச்சம் பற்றிய நூல்கள் பலவற்றைப் படித்தேன். அவற்றில் நான் கண்ட நல்ல பல கருத்துக்கள் என் சிந்தனையைத் தூண்டின. நான் சிந்தித்தேன். என் மனத்திரையில் எத்தனையோ வகையான அச்சங்கள் வந்து போயின. நோய், நொம்பலம் பற்றிய அச்சம், விபத்து, விபரீதம் பற்றிய அச்சம், இழப்பு, இன்னல் பற்றிய அச்சம், முதுமை, இறப்பு பற்றிய அச்சம், பேய், பிசாசு பற்றிய அச்சம், அணுகுண்டு, ஆட்கொல்லிப் போர் பற்றிய அச்சம், இப்படி பலப்பல. அத்துடன் பல்லி பாச்சான்களைப் பார்த்து பயப்படுகிறவர்களும், அறிமுகமில்லாத அன்னியரைக் காணின் கூனிக் குறுகுபவர்களும், கடமை பொறுப்புகளை ஏற்க அஞ்சுபவர்களும் என் மனத்திரையில் பவனி வந்தார்கள். இம்மாதிரி இவர்கள் அஞ்சுவது அவசியம்தானா இம்மாதிரியான அச்சகங்கள் ஏன் ஏற்படுகின்றன. அவற்றை அகற்ற வழி என்ன என என்னுள் பல வினாக்கள் எழுந்து விரிந்தன. நான் கற்றவை, கண்டவை, பட்டவை, கேட்டவை என உதவிக்கு வந்தன. என் வினாக்களுக்கு நல்ல பதவிகளும் கிடைத்தன. அந்தப் பதில்களில் அச்ச நோய்க்கான பரிகாரங்கள் அடங்கியிருந்தன. அவற்றை இந்நூலில் அளித்திருக்கிறேன். அச்சத்தால் அவதிப்படுவோர்க்கு இந்நூல் ஓரளவு உதவும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம்.முகமது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்கள்.