book

கருப்பும் நீலமும்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாரதா தேவி, இக்லாஸ் உசேன், குண சந்திரசேகர்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2022
Add to Cart

எங்களைப் பொறுத்த வரையில் கருப்பும் நீலமும் வெவ்வேறு வண்ணங்களின் பெயராக இருக்கலாம்; பெரியார், அம்பேத்கர் என்பன தனி நபர்களின் பெயராக இருக்கலாம்; ஆனால் அவற்றின் பின் இயங்கும் தத்துவமும் இலட்சியமும் ஒன்றுதான். அது தான் பிறவி இழிவு நீக்கம். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பிறவியிலேயே ஒருவன் / ஒருவள் மற்றொருவருக்கு கீழே என விதித்து, எந்தச் சூழலிலும், என்ன முயன்றாலும் அச்சமூக அடுக்கினில் அவன்/அவள் மேலே ஏற முடியாது - அதுவே இறைவனின் கட்டளை என்ற கொடுமையான நிரந்தர ஏற்றத்தாழ்வை திணிக்கும் சாதிய முறையைத் தகர்த்தெறிவதே இவ்விரு எண்ணங்களின் முதன்மை லட்சியம். சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை விரும்பும் எவராலும் பிரித்து பார்க்கமுடியாத, பேராளுமைகள் பெரியாரும் அம்பேத்கரும் . நமது கொள்கை வழிகாட்டிகளாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து வெங்காயம் மின்னிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான கருப்பும் நீலமும் என்ற நூல் கருஞ்சட்டை பதிப்பகம் மூலம் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.