book

திராவிடம் வளர்த்த தமிழ்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :43
பதிப்பு :5
Published on :2018
Add to Cart

திராவிட இயக்கம்  தோன்றிய நாள்தொட்டே, அதற்கு எதிரான குரல்களும்  ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இன்று அவை மீண்டும் சமூக, அரசியல் அரங்குகளில் கேட்கத் தொடங்கியுள்ளன. திராவிடம்தான் தமிழுக்கும், தமிழ்த் தேசிய உணர்வுக்கும் எதிரி போல் சிலர் பேசியும், எழுதியும் வருகின்றனர். இச்சூழலில்தான், இன்றையத் தேவை திராவிடமோ, தமிழ்த் தேசியமா என்ற விவாதம்  நடத்தப்படுகிறது. உண்மையில் இவ்விவாதமே தேவையற்றது என்று கூற வேண்டும். தமிழின்றித் திராவிடம் இல்லை, திராவிடம்  இன்றித் தமிழ் இல்லை. இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய வரலாற்றுத்  தொடர்புடையன. திராவிட இயக்கத்தினரைப்  பொருத்தமட்டில், திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச்சொல். அதற்கும், தமிழுக்கும் உறவுண்டேயன்றிப் பகை இல்லை.