book

நீங்கள் எந்தப் பக்கம்?

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2021
Add to Cart

வர்க்க பேதம் ஒழிய வேண்டும் என்பதை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஆழ்ந்து சிந்தித்து உருவாக்கிய கம்யூனிசச் சிந்தனையாளர்கள். வர்க்கம் என்பது சமுதாயத்தின் ஒரு தனியான பகுதியாக இருந்தால் அதை எவர் வேண்டுமானாலும் சுலபமாகத் தீர்த்துவைத்திருக்க முடியும். ஆனால், உடலில் பெரிய அறுவை சிகிச்சையான இதய அறுவை சிகிச்சை செய்வதானாலும் காலில் சின்ன காயத்துக்குக் கட்டுப் போடுவதானாலும் ரத்த ஓட்டத்தைக் கவனிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமுதாயத்தில் இன ஓட்டமும். இன வாதத்திலிருந்து பிரித்து வர்க்கத்தைத் தனியாக சிகிச்சை செய்துவிட முடியாது என்ற சாராம்சத்தை இந்த நூலில் முன்னெடுத்திருக்கிறார் நூலாசிரியர் திருமாவேலன். ஆனாலும், சில கம்யூனிஸ்டுகள் இதைப் புரிந்துகொண்டாலும் புரியாததுபோல இருக்கிறார்களா என்று அவர்கள் கொள்கைகளை அசைத்துப் பார்க்கிறார்! எது எப்படியானாலும் இறுதியில் சமூகம் இந்த இன காழ்ப்புகளையும் மறந்து, வர்க்க பேதங்களையும் மறந்து சுகமாக வாழ வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்குள் எத்தனை போராட்டங்கள், விவாதங்கள், விருப்பு வெறுப்பு என்பதை அலசுகிறார். ஆனால், இதில் மைய நீரோட்ட அரசியலில் இருப்பதற்காகச் சிலர் ஒருதலைப்பட்சமாக நடப்பதைச் சாடுகிறார். மார்க்ஸை, லெனினை, மாவோவை ஆழ்ந்து படித்து, அதேபோல ஈழத்தின் வரலாற்றை ஆழ்ந்து உள்வாங்கி, அதை எப்படி மார்க்சிஸ்ட்டுகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் பயன்படுத்த முயற்சித்திருக்கிறார்கள், அதன் விளைவாக நேர்க்கோட்டிலிருந்து விலகி எப்படி ஓடுகிறார்கள் என்பதை நூலாசிரியர் முன் வைக்கிறார்.