book

புரட்சிகளின் யுகம் (1789-1848)

₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எரிக் ஹோப்ஸ்பாம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

1789 மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியை நவீன யுகத்தின் முதலாண்டாகக் குறிப்பிடுகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று அற்புதமான சமூக விடுதலை இலக்குகள் உருவாக்கப்பட்டன. இவற்றோடு சிவப்புக் குடியரசு'களை உருவாக்குவோம் என்ற குரலும் அதேகாலத்தில் சேர்ந்து ஒலித்தது. 1848 ஆம் ஆண்டு இரண்டாவது பிரெஞ்சுப் புரட்சியைக் குறித்தது. அதே ஆண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை'யையும் உலகுக்குத் தந்தது. நிலவுடைமை முடியாட்சி மற்றும் பழம் மரபுகளின் சாவு, புதிய வர்க்கங்களின் எழுச்சி, விஞ்ஞானங்கள், எந்திரத் தொழில் நுட்பவியல், அறிவின் பிரும்மாண்ட விரிவு ஆகியன உலகுக்கு அறிமுகமாகின. இங்கிலாந்து தொழில் மற்றும் வணிகப் புரட்சியையும், பிரான்சு அரசியல் புரட்சியையும் குறித்து நின்றன. தேசியம், புறட்சி, சனநாயகம், அறிவொளி இயக்கம் ஆசியாவ வளர்ச்சிக்குத் தலைமை தாங்கி ஐரோப்பிய மையவாதமும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. பணம், அதிகாரம். காலனியாதிக்கம், நகரமயமாக்கம் ஆகியவை முன்னுக்கு வந்தன. புரட்சி எனும் அரசியல் உணர்வு வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் தொட்டுத் துடைத்து உருமாற்றியது என்று எரிக் ஹோப்ஸ்பாம் எழுதுகிறார்.